திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து இன்று தாராபுரத்தில் பிரம்மாண்ட ரோடு ஷோ மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
தாராபுரம் அமராவதி சிலையிலிருந்து தொடங்கி, பொள்ளாச்சி சாலை மற்றும் பெரியகடை வீதி வழியாக இந்த ரோடு ஷோ நடைபெற்றது. இப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கும்

வீதிகளுக்கும் நேரடியாகச் சென்று மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். திமுக


தலைவர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோவின் போட்டோ ஆல்பம் வௌியாகியுள்ளது.

ரோடு ஷோவைத் தொடர்ந்து, இன்று மாலை 5 மணியளவில் உடுமலை சாலை மல்லி ரிசார்ட் அருகில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
தாராபுரத்தைத் தொடர்ந்து, நாளை (அக்டோபர் 3) மற்றொரு இடைத்தேர்தல் தொகுதியான

மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் இ. பரந்தாமனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்


செய்யவுள்ளார்.

அக்டோபர் 6ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் அக்டோபர் 4-ஆம் தேதியுடன் நிறைவடைவதால், தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது
