அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வீடு கட்டுமானப் பணியின்போது செப்டிக் டேங்கில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கட்டுமானப் பணிக்காக செப்டிக் டேங்கில் இறங்கிய தொழிலாளர்கள், விஷவாயு தாக்கியதாக கூறப்படும் நிலையில் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி 3 பேரையும் மீட்டனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் அருகே செப்டிக் டேங்கில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி
