Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி-திருச்சி அருகே பரிதாபம்

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி-திருச்சி அருகே பரிதாபம்

புள்ளம்பாடி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

திருச்சி மாவட்டம் லால்குடி புள்ளம்பாடி யூனியன் ஆபீஸ் ரோடு
பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிதுரை (48). கூலித் தொழிலாளி இவருக்கு திருமணம் ஆகவில்லை. வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த பாண்டித்துரை அதற்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் அங்குள்ள ஒரு கோவில் குளத்தில் குளிக்கச் சென்றார் அப்போது அவருக்கு வலிப்பு வந்தது. பின்னர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது சகோதரர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஊத்துக்குளி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சின்னப்பாவை (வயது 66) இவர் ஊத்துக்குளி பகுதியில் சாலையோரம் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு கொடும்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சின்னப்பா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் பின்னர் இது பற்றி அவரது மகன் செந்தில்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை விராலிமலை ஆலங்குளம் பகுதியில் சேர்ந்த செந்தில்குமார் 41 என்பவர் மீது வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!