Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடவடிக்கை எடுக்காத 4 காவல்துறையினர் ஆயுதப்படைக்கு மாற்றம்

நடவடிக்கை எடுக்காத 4 காவல்துறையினர் ஆயுதப்படைக்கு மாற்றம்

குற்ற வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்காத காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு காவல்துறையினர் ஆயுதப்படைக்கு மாற்றம்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதை பொருள் கடத்தல், மது கடத்தல், பாலியல் உள்ளிட்ட வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக காவல் உதவி ஆய்வாளர் குமரவேல் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்ற வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனிப்படையை கலைத்து காவல் உதவி ஆய்வாளர் குமரவேல், தலைமை காவலர் தர்மலிங்கம, காவலர் ஜெகன், சின்னதுரை ஆகிய நான்கு பேரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!