மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபா மாவட்டம் துலியானில் உள்ள சாகர்திகி தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் MLA பைரான் பிஸ்வாஸின் வீட்டில் இன்று (அக்.4) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அவர் பலத்த தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டிடத்தின் தரைத்தளத்தில் இயங்கி வரும் பீடி தொழிற்சாலை தொழிலாளர்கள் மேல்தளத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் திடீர் தீ விபத்து: MLA தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
