Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாரதிதாசன் பல்கலை கபடி போட்டி: திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்

பாரதிதாசன் பல்கலை கபடி போட்டி: திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்லதிற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான கபடி போட்டி குடந்தை அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் திருச்சி மண்டலத்திலிருந்து ஜமால் முகமது, கரூர், கொங்கு கலை மற்றும் அறிவியல், தஞ்சை மண்டலத்திலிருந்து புதுகை, மாமன்னர், திருக்காட்டுப்பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஆகிய நான்கு கல்லூரி அணிகள் லீக் போட்டிகளில் பங்கேற்றன.
லீக் போட்டிகளில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரி, கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை (38 – 26) என்ற புள்ளிகள் கணக்கிலும்,, புதுகை, மாமன்னர் கல்லூரியை (58 – 28) என்ற புள்ளிகள் கணக்கிலும்,
திருக்காட்டுப்பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரியை (45 – 09)
என்ற புள்ளிகள் கணக்கிலும் மூன்று போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்து பாரதிதாசன் பல்கலைக்கழக கபடி போட்டியில் தொடர்ந்து 11வது ஆண்டாக சாம்பியன் அணியாக திகழ்ந்தது.
கரூர், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதுகை, மாமன்னர் கல்லூரியை என்ற (60 – 22) என்ற புள்ளிகள் கணக்கிலும், திருக்காட்டுப்பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரியை (48 – 26) என்ற புள்ளிகள் கணக்கிலும் இரண்டு போட்டிகளில் வென்று இரண்டாம் இடம் பிடித்தது.

திருக்காட்டுப்பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதுகை, மாமன்னர் கல்லூரியை (35 – 32) என்ற புள்ளிகள் கணக்கில் ஒரு போட்டியில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.
கபடி போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ஜமால் முகமது கல்லூரி வீரர்களை கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர், ஏ. கே. காஜா நஜீமுதீன், பொருளாளர் எம். ஜெ. ஜமால் முகமது, உதவி செயலாளர் கே. அப்துஸ் சமது, மதிப்புறு இயக்குனர் கே. என். அப்துல் காதர் நிஹால், முதல்வர், ஆர். ஜாகிர் உசைன், துணை முதல்வர் காஜா மொய்தீன், விடுதி இயக்குனர் கே. என். முகமது பாசில், பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவர் மற்றும் விளையாட்டு செயலாளர் பேராசிரியர் ஏ. பழனிச்சாமி, கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பி. எஸ். ஷா இன் ஷா, ஆகியோர் வாழ்த்தினார்கள்.

error: Content is protected !!