நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி கணேசன் (47), மானூர் அருகே உள்ள வடக்கு வாகைகுளத்தில் இயங்கும் மரப்பட்டறையில் தங்கி வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு பட்டறையின் மாடியில் தூங்கிய அவர், இன்று காலை முகத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். தகவலறிந்து வந்த மானூர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். கொலைக்கான காரணம் குறித்து சக ஊழியர்களிடம் விசாரிப்பதுடன், சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
நெல்லையில் தச்சு தொழிலாளி வெட்டிக்கொலை
