ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள விவசாயத் தோட்டக் கிணற்றில் 7 அடி நீளமுள்ள பெரிய நாகப்பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு மீட்பு வீரர் நவீன், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த நாகப்பாம்பை உயிருடன் சாதுரியமாக மீட்டார். கிணற்றிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட அந்த நாகப்பாம்பு, அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுசென்று விடப்பட்டது. தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கிணற்றில் தவறி விழுந்த 7 அடி நீளமுள்ள நாகப்பாம்பு மீட்பு
