தவெகவில் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்ட நாஞ்சில் சம்பத், அக்கட்சியிலிருந்து விலகி தனுஷ் அமைப்பில் இணைந்துவிட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து விளக்கம் அளித்த நாஞ்சில் சம்பத், தனுஷுடன் இணைந்ததாகத் தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், “அதுபோன்ற முட்டாள்தனத்தை நான் எப்போதும் செய்ய மாட்டேன்; நான் இன்னமும் தவெகவில்தான் நீடிக்கிறேன்” என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தவெகவில் தான் நீடிக்கிறேன்: நாஞ்சில் சம்பத்
