தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராகப் பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தமிழக அரசால் வெளியிடப்பட உள்ளது. தமிழ் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மற்றும் இசைத் துறையில் ஆற்றிய நீண்டகால பங்களிப்பிற்காக இவர் இப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது தலைவராக உள்ள வாகை சந்திரசேகரின் பதவிக்காலத்தைத் தொடர்ந்து, இப்புதிய நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராகிறார் புஷ்பவனம் குப்புசாமி?
