Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

அரியலூர்:திருமணம் செய்வதாகக் கூறி 10ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி கர்பமாக்கிய வாலிபர். ஆயுள் தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு..

அரியலூர் மாவட்டத்தில்
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 10 வகுப்பு பள்ளி மாணவியை ஏமாற்றி, அவரது கர்ப்பத்தை சட்டவிரோதமாக கலைக்க முயன்ற வாலிபர் மீது நடவடிக்கை. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூபாய் 7 லட்சம் இழுப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கும்,பட்டதாரியான வில்வேந்திரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய வில்வேந்திரன், அந்த சிறுமியுடன் பலமுறை உடலுறவு வைத்துள்ளார்.
இந்நிலையில், அந்த மாணவி கர்ப்பமானதை அறிந்து வில்வேந்திரனிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் திருமணம் செய்ய மறுத்ததுடன், கர்ப்பத்தைக் கலைக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனை அறிந்த மாணவியின் தந்தை தனது மகளின் வாழ்க்கையைச் சீரழித்த வாலிபர் வில்வேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

​இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்ற அரசு தரப்பு வழக்கறிஞர் பாஸ்கர் வாதிட்டார்.

இவ்வழக்கை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி மணிமேகலை, குற்றவாளி வில்வேந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசின் சார்பாக ரூபாய் 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

error: Content is protected !!