Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அகவிலைப்படி நிலுவையை முழுமையாக வழங்க ஏஐடியூசி கோரிக்கை

அகவிலைப்படி நிலுவையை முழுமையாக வழங்க ஏஐடியூசி கோரிக்கை

தஞ்சையில் இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்க ஏ.ஐ.டி.யூ.சி மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்றோர் சங்கத் தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார் . பொதுச்செயலாளர் அப்பாத்துரை நடந்துள்ள பணிகள் குறித்தும் அடுத்து நடக்க உள்ள நிகழ்ச்சிகள் குறித்தும் பேசினார். சிறப்பு விருந்தினர்களாக ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் தில்லைவனம், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் , ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை தொகையை முழுமையாக வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். பணியில் உள்ளவர்கள் ஓய்வு பெறும்போது அதற்கான பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் . காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கண்காணிப்பாளர்கள் சம்பத்குமார், வீராச்சாமி, நிர்வாகிகள் அருள்தாஸ், சந்திரன், சுப்ரமணியன், இருதயராஜ், மனோகரன், ஜெரால்டு ரவீந்திரன், குணசேகரன், ஞானசேகரன், தங்கராஜ், கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓய்வு பெற்றோர் சங்க பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

error: Content is protected !!