சென்னை: பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 21ம் தேதி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் ஊழியர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 65% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராக பணியாற்றி வந்த ராஜேஸ்வரி, இவர் செப்டம்பர் 21 அன்று மாலை பணி முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது , அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெட்ரோல் ஊற்றி எரித்த பிரகாஷை போலீசார் சுட்டு பிடித்த நிலையில் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
