Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெய்தலூரில் டாஸ்மாக் கடை மாற்றக் கோரி கிராம மக்கள் முற்றுகை

நெய்தலூரில் டாஸ்மாக் கடை மாற்றக் கோரி கிராம மக்கள் முற்றுகை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, நெய்தலூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடையினால் மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக இருப்பதால் இப்பகுதி மக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில்


தாசில்தார் மற்றும் டாஸ்மாக், காவல்துறை அதிகாரிகள், முன்னிலையில் மதுபான கடையை 6.10.26 முதல் இடம் மாற்றப்படும் என்று கிராம மக்களிடத்தில் உத்தரவாதம் வழங்கப்பட்டது. அதன்படி டாஸ்மாக் கடை மூடாததால் நெய்தலூர் கிராமவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், நெய்தலூர் அரசு மதுபான கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன்


கும்பகோணம் கோட்ட கலால் அலுவலர் மணிகண்டன், தஞ்சாவூர் டாஸ்மாக் உதவி மேலாளர் தர்மராஜ், பாபநாசம் வட்டாட்சியர் பிரகாஷ், பாபநாசம் போலீஸ் துணை கண்காணிப்பாளர்

முருகவேல் உட்பட அரசு அலுவலர்கள் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
வருகின்ற 26 ஆம் தேதிக்குள் கடையை மாற்றிக் கொள்வதாக அரசு அதிகாரிகள் தெரிவித்ததின் பெயரில் போராட்டத்தில் ஈடுபட்ட நெய்தலூர் கிராமமக்கள் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலைந்து சென்றனர்.

error: Content is protected !!