80 வயது மூதாட்டி மயங்கி விழுந்து சாவு
திருச்சி திருவரங்கம் வயலூர் ரோடு பகுதியை சேர்ந்த 80 வயது முதாட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது பேரனின் மகனை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் சென்றார். இந் நிலையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென்று மூதாட்டி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் மூதாட்டி இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியில் விபத்து-வேன் மோதி வாலிபர் சாவு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தாளக்குடி அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் இவரது மகன் சஞ்சய் (20) அதே பகுதியை சேர்ந்தவர் மணி பாரதி இருவரும் நேற்று தாளக்குடியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி வந்தனர். இவர்கள் வந்த இருசக்கர வாகனம் திருச்சி ஓயாமரி சுடுகாடு பகுதி மெயின் ரோட்டில் வந்த பொழுது எதிரே வந்த வேன் எதிர்பாராதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தின் இருந்த சஞ்சய் மற்றும் மணி பாரதி இருவரும் காயமடைந்தனர்.இதை எடுத்து ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் அங்கு தலையில் பலத்த காயமடைந்த சஞ்சய் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று விடிய காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
