Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பட்டதாரி வாலிபரிடம் இன்ஸ்டா., மூலம் ரூ.11.23 லட்சம் மோசடி

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் பிஎஸ்சி வேளாண்மை பட்டதாரி ஆவார். இவர் அரசு வேலை கிடைக்க தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 6ந் தேதி அடையாளம் தெரியாதா நபர் ஒருவர் பிரகதீஸ்வரன் செல்போனில் இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் அவரை தொடர்பு கொண்டு தன்னிடம் ஆன்லைன் வேலை ரியல் எஸ்டேட் விமர்சனம், வர்த்தகம், முதலீடு வேலைவாய்ப்புகள் போன்றவை இருப்பதாக கூறியுள்ளார். மேலும் பிரகதீஸ்வரனை டெலிகிராம் குழுவிலும் சேர்த்து இந்த குழுவில் பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய பிரகதீஸ்வரன் தனது வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 11 லட்சத்து23 ஆயிரத்து 92 ரூபாய் பணத்தை பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் மாற்றியுள்ளார். பிறகு முதலீடு பணத்தை பிரகதீஸ்வரன் எடுக்க முயன்ற போது அவரால் அதை எடுக்க முடியவில்லை. பிறகு தான் அவர் ஏமாற்றப்பட்டது தெரிய வந்த வ இதையடுத்து ஆன்லைன் மூலம் பிரகதீஸ்வரன் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகதீஸ்வரன்யிடம் ரூ 11 லட்சம் பணத்தை ஏமாற்றி திருடிய மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!