Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு.

3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு.

தமிழ்நாட்டில் பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் நிலப்பரப்பில் வீசும் வறண்ட காற்றின் காரணமாக அவ்வப்போது வெப்பநிலை அதிகரித்து காணப்படுவது வழக்கம். வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலப்பரப்புத் தன்மையினாலும் காற்றின் ஈரப்பதம் குறைவதினாலும் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாகப் பதிவாகி வருகிறது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வட தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவைக் காட்டிலும் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும். இதனால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகலாம். அதேவேளையில், தென் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை பெரிய மாற்றமின்றி இயல்பை ஒட்டியே காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!