Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திருச்சி அரியமங்கலம் கணபதி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபொழுது கஞ்சா விற்பனை செய்து கொண்ட உக்கடை அரியமங்கல பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 20) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா வை பறிமுதல் செய்துள்ளனர்.

வெவ்வேறு சம்பவங்களில்

திருச்சியில் ரூ 1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் திருச்சி அக் 7- திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கல்லுக்குழி ரெயில்வே மைதானம் அருகில்தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு மர்ம ஆசாமி ஒருவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது அங்கு போலீசார் வருவதை பார்த்து அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். பிறகு போலீசார் அங்கு இருந்த 21 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூபாய் 50 ஆயிரம் ஆகும். இதேபோன்று திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் போலீசார் காந்தி மார்க்கெட் வெங்காயம் மண்டி அருகில் சென்று பார்த்த பொழுது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த தாராநல்லூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 35) மாதவன் (வயது 40 )ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 22 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர் இவற்றின் மதிப்பு ரூபாய் 50 ஆயிரம் ஆகும்.

போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி உள்பட 3 பேர் கைது

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல் வாரி துறை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாலக்கரை இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தார் பாலக்கரை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 28) பிரசன்னா (வயது 27) கிறிஸ்டன் (வயது 22) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பிரசன்னா ரவுடி பட்டியலில் உள்ளார்.

error: Content is protected !!