Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“சட்டசபை சிரிப்பு மன்றமா?” – கோவையில் ஐயப்பன் ஆவேசம்

“சட்டசபை சிரிப்பு மன்றமா?” – கோவையில் ஐயப்பன் ஆவேசம்

மன்மத நன்றி சொல்ற அளவுக்கு சட்டசபை சிரிப்பு மன்றமா போச்சு” – கோவையில் தே.மு.தி.க முப்பெரும் விழாவில் ஐயப்பன் ஆவேசப் பேச்சு!

ஜெயலலிதாவை நேருக்கு நேர் எதிர்த்து நின்ற ஒரே சிங்கம் கேப்டன்; ‘ஆதவ் அர்ஜுனாவா? விஜய்யா?’ யார் முதல்வர் என்றே தெரியவில்லை என கடும் விமர்சனம்!

​
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) கோவை மாநகர மாவட்டம் சார்பில், கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, கழகத்தின் 22-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா கோவையில் மிக விமரிசையாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை சட்ட ஆலோசகர் ஐயப்பன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மூன்று சக்கர வாகனம்,பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு,புக் மற்றும் பெண்களுக்கு சேலைகள்,ஈஸ்த்ரி பெட்டி வழங்கினார் இந்த விழாவில் மாநகர் மாவட்ட செயலாளர் சிங்கைkசந்துரு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் செல்வம்,பொன்ராஜ்,ராகவலிங்கம்,கோவிந்தராஜ்,ஜெயக்குமார், பழனி,கற்பகம், கருப்புத்துரை,
தேவராஜ்,பிரபு,நீ.நா.வேலுச்சாமி,செந்தில்குமார், ஜனா சுலைமான்,முருகராஜ்மற்றும் ஏராளமானனோர் கலந்துகொண்டனர்

மேலும்
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய சட்ட ஆலோசகர் ஐயப்பன் பேசுகையில்:

“கல்வி கண் திறந்த காமராஜரைக் காம வீரர் என்று தவறாகப் பேசியவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில் இருந்தார்கள். ஆனால், மக்கள் பிரச்சனைக்காக, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வை எதிர்த்துச் சிங்கம் போன்று ஜெயலலிதா அம்மையாரையே சட்டமன்றத்தில் நேருக்கு, நேர் கேள்வி கேட்ட ஒரே தலைவன் நம்ம கேப்டன் விஜயகாந்த் மட்டும் தான்! அவர் வந்தால் நம்மால் முதல்வராக முடியாது என்ற பயத்தில் தான் அவரை அரசியல் ரீதியாக வீழ்த்தினார்கள்.
​ஆனால், இன்றைக்குச் சட்டமன்றத்தில் நடப்பதைப் பார்த்தால் நாம் குஸ்தி மைதானத்திற்குச் செல்லவே தேவையில்லை. தினமும் ஒரு பிரச்சனை, தினமும் சிரிப்பான பேட்டிகள் நடக்கிறது. மனமார்ந்த நன்றி என்று சொல்வதற்குப் பதிலாக ‘மன்மத நன்றி’ என்று சொல்லும் அளவுக்குச் சட்டமன்றம் ஒரு நகைச்சுவை மன்றமாக மாறிவிட்டது” என அனல் பறக்கப் பேசினார்.

​

மேலும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவைக் கையெடுத்து கும்பிட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், “அவர்களை விட மோசமான ஆட்சியை இவர்கள் நடத்துகிறார்கள். ஒரு சுகாதாரத் துறை அமைச்சர் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க அனைவரும் முழுக்கை சட்டை போடுங்கள் என்று விசித்திரமான தீர்வு சொல்கிறார்” எனக் கிண்டலடித்தார்.

​கேப்டன் விஜயகாந்த் போன்ற ஒரு நல்ல மனிதரைத் தமிழக மக்கள் தவற விட்டு விட்டார்கள் என்றும், அவர் வாழ்ந்த காலம் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த முப்பெரும் விழாவில் ஏராளமான தே.மு.தி.க நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!