நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தண்ணீர் டேங்க் அருகே நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அதைப் பிடித்துச் சென்றனர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பொதுமக்கள் மனு கொடுக்க வரும் கலெக்டர் அலுவலகத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ்காரர்கள் பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அதனை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பதுங்கிய நல்லபாம்பு பிடிபட்டது
