இத்தாலியின் வெனடோ மாகாணத்தில் உள்ள கார்டா ஏரி அருகே பெச்சிரா டெல் கார்டா வனப்பகுதியில் நேற்று பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. சுற்றுலாவுக்காக முகாம் அமைத்திருந்த பலர் இதில் சிக்கிக்கொண்டனர். இந்த காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கார்டா ஏரி அருகே காட்டுத்தீ: 24 பேர் படுகாயம்
