Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாம்பு கடித்து பெண் பலி; தூத்துக்குடியில் பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள நடுவைகுறிச்சி இருவப்பபுரத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி அமுதாசெல்வி (56). இவர் காமராஜ் நகர் அருகே உள்ள ஒரு தனியார் பால் பண்ணையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அமுதாசெல்வியின் கால் பாதத்தில் எதிர்பாராதவிதமாக விஷப் பாம்பு ஒன்று கடித்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் அவரைச் சிகிச்சைக்காக செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அமுதாசெல்வி பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் பரிசோதித்துத் தெரிவித்தனர்.இதையடுத்து, இவரது உடல் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அவரது கணவர் துரைராஜ் அளித்த புகாரின் பேரில், சாயர்புரம் காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

error: Content is protected !!