Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரதமரின் சூரிய வீடு திட்டம் – திருச்சியில் சோலார் மின் இணைப்பு முகாம்!

பிரதமரின் சூரிய வீடு திட்டம் – திருச்சியில் சோலார் மின் இணைப்பு முகாம்!

சூரிய சக்தியைப் பயன்படுத்தி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் கடந்த 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய தகடுகள் பொருத்தி, இலவச மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. இதன்படி, ஒரு கிலோ வாட் சூரிய மின்திறன் உற்பத்திக்கு மானியமாக 1 கிலோ வாட்டுக்கு ரூ. 30 ஆயிரம், 2 கிலோ வாட்டுக்கு ரூ. 60 ஆயிரம், 3 கிலோ வாட் முதல் 10 கிலோ வாட் வரை ரூ. 78 ஆயிரம் என மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் வரும் மார்ச் 31, 2027 வரை பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு ஒரு கிலோ வாட் சூரிய மின்திறன் உற்பத்திக்கு மானியமாக ரூ. 5 ஆயிரம், 2 கிலோ வாட்டுக்கு ரூ. 10 ஆயிரம், 3 கிலோ வாட் முதல் 10 கிலோ வாட் வரை ரூ. 22 ஆயிரம் கூடுதலாக தமிழ்நாடு அரசின் மாநில மானியமாக வழங்கப்பட உள்ளது, திருச்சி மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் இதுவரை 4,500 பேர் பயன் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தில் பணிகள் நிறைவுற்ற 7 நாளில் இருந்து 30 நாள்களுக்குள் நுகர்வோரின் வங்கி கணக்கில் மானியம் நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தென்னூரில் இன்று செயற்பொறியாளர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தலைமைப் பொறியாளர் கே. ரோஜா ரமணி முகாமை தொடங்கி வைத்தார். இதில் மேற்பார்வை பொறியாளர் எஸ். செந்தாமரை, செயற்பொறியாளர் (நகரியம்) கே.ஏ. முத்துராமன், செயற்பொறியாளர் ( பொது) எஸ். ராதிகா செயற்பொறியாளர் அன்புச்செல்வன் ,வழக்கறிஞர் எம் கோபாலகிருஷ்ணன், சங்கீத் ஹோட்டல் மேலாளர் முத்தையா, வென்டர்கள் ஸ்டால் உரிமையாளர்கள் உதவி செயற்பொறியாளர்கள் உதவி மின் பொறியாளர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!