Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கொசு உற்பத்தி – குடியிருப்புகளுக்கு ரூ.24 ஆயிரம் அபராதம்!

திருச்சியில் கொசு உற்பத்தி – குடியிருப்புகளுக்கு ரூ.24 ஆயிரம் அபராதம்!

திருச்சி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாவதை ஆரம்ப நிலையிலேயே அழிக்க 400 தற்காலிக கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இம்மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களிளும், அனைத்து வீடுகளையும் தினமும் ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் ஆதாரங்களை கண்டறிந்து அழிக்கப்பட்டு அபேட்மருந்து தெளித்து , புகைமருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று மண்டலம் 2 மற்றும் 3, 35, 49 ஆகியவார்டுகளில் உள்ள குடியுருப்புகளில் மாநகராட்சி ஆணையர் .பொன்மணி மற்றும் செயற்பொறியாளர், சுகாதார அலுவலர்களுடன் அப்பகுதி முழுவதும் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டடு பொதுமக்களுக்கு கொசுப் புழு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
புதிதாக கட்டபடும் கட்டடங்கள், குடியிருப்புகள் ஆகிய கட்டிடங்களில் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்ததில் இக்கட்டிடங்களில் டெங்கு கொசுக்கள் உருவாக காரணமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதால் 8 குடியிருப்புகளுக்கு ரூ.24000/- அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்கள் சில இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக புதிய கட்டிடங்கள் கட்டுமானம் நடைபெறும் இடங்களில் உள்ள தற்காலிக தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றில் கொசு புழு உற்பத்தியாவதை கட்டிட உரிமையாளர்கள் உடனடியாக அகற்ற வேண்டும், மாநகராட்சி மூலம் அகற்றப்பட்டால் அதற்காக தொகை வசூல் செய்வதுடன், பொது சுகாதார சட்டத்தின்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் நலன் கருதி முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அவர்கள் கேட் டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!