டில்லி மெட்ரோவின் 57 ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
டில்லி ஜந்தர் மந்தரில் நாளை தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தவிருக்கும் பிரம்மாண்ட போராட்டத்தை முன்னிட்டு, டெல்லி காவல்துறை விடுத்த பாதுகாப்பு எச்சரிக்கையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று இரவு 9 மணி முதல் அங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அடுத்த உத்தரவு வரும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 57 மெட்ரோ நிலையங்களில் பயணிகள் உள்ளே நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதி இல்லை. ராஜீவ் சௌக், லோக் கல்யாண் மார்க், சென்ட்ரல் செக்ரடேரியட், ஜன்பத், படேல் சௌக், புது தில்லி, சேவா தீர்த்த், மண்டி ஹவுஸ் மற்றும் ஜன்பத் ஆகிய மெட்ரோ நிலையங்கள் அடங்கும். புது தில்லி மெட்ரோ நிலையத்தைத் தவிர, மற்ற அனைத்து குறிப்பிட்ட மெட்ரோ நிலையங்களிலும் வழித்தடம் மாறும் வசதி (interchange facility) தொடர்ந்து செயல்படும் என்று DMRC தெரிவித்துள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
