Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல்லையில் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற 2 பேர் கைது!

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே கடந்த 25-ஆம் தேதி இரவு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் ஆத்திரமடைந்த இருவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றதுடன், கொலை மிரட்டல் விடுத்துத் தப்பியோடினர்.

இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், பொன்மணி, இசக்கிராஜா ஆகிய இருவரையும் இன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!
Secret Link