நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.122-க்கு விற்பனையாகி வந்தது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் கறிக்கோழி விலை கிலோ ரூ.117 ஆக குறைந்துள்ளது. முட்டைக்கோழி விலை கிலோ ரூ.118 ஆகவும், முட்டை விலை ரூ.5.40 ஆகவும் உள்ளது. இவற்றின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லில் கறிக்கோழி விலை கிலோ ரூ.5 குறைப்பு
