Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10 சவரன் நகையுடன் மாயமான பணிப்பெண் காதலனுடன் சிக்கினார்!

10 சவரன் நகையுடன் மாயமான பணிப்பெண் காதலனுடன் சிக்கினார்!

வேளச்சேரி: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீட்டில் வேலை செய்வதுபோல் நடித்து 10 சவரன் தங்க நகைள் மற்றும் 30 ஆயிரம் திருடிய பெண் காதலனுடன் பிடிபட்டார். வேளச்சேரி அடுத்த, கோவிலம்பாக்கம், பூபதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மருத்துவர் கார்த்திக் (35). இவரது மனைவியும் மருத்துவர். இருவரும் வெவ்வேறு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகின்றனர். இவரது வீட்டில் வேலை செய்வதற்காக கடந்த மூன்று மாதத்திற்கு முன் மயிலாடுதுறை மேலப்பாளையம் நடுக்கரை புதிய தெருவைச் சேர்ந்த ஆர்த்தி (19) என்ற பெண்ணை வேலைக்கு சேர்த்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் நகை வைத்திருந்த சூட்கேஸ் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி, பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 10 சவரன் நகைகள், ரொக்க பணம் ரூ.30 ஆயிரம் மற்றும் பட்டு புடைவைகள் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டனர்.

இதையடுத்து அவர்கள் பள்ளிகரணை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டின் அருகில் பாத்துகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவர் வீட்டில் வேலை செய்து வந்த ஆர்த்தி சூட்கேஸ் மற்றும் 5 பைகளை எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது. மேலும் அந்த பெண் அடுத்த நாளில் இருந்து வேலைக்கும் வராமல் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஆர்த்தியின் செல்போன் சிக்னல்களை கண்காணித்தனர். அப்போது சென்னை பாரிசில் உள்ள தங்கும் விடுதியில் ரூம் எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஆர்த்தியை கைது செய்தனர். மேலும் அவருடன் தங்கி இருந்த காதலன் அபினேஷ் (22) என்பவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுதி அறையில் மறைத்து வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகள், ரொக்க பணம் ரூ.30 ஆயிரம் மற்றும் வீட்டிலிருந்து எடுத்து சென்ற பட்டு புடைவைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இருவரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் இருவரும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைப் பிடித்த பள்ளிக்கரணை குற்றப்பிரிவு காவல்துறையினரை தாம்பரம் மாநகர காவல் பொறுப்பு ஆணையர் அமல்ராஜ் பாராட்டியுள்ளார்.

error: Content is protected !!