தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (அக்.13) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான சாதகமான சூழல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தென்மேற்கு வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மழைப் பொழிவு தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும்
