கரூரில் கற்பினை பெண்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது, நல்ல பாடல்கள், புத்தகங்களை படிக்க வேண்டும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயலட்சுமி பேச்சு.
கரூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் கற்பினி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் முத்துக் குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பால் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி கலந்து கொண்டு வளைகாப்பு நடத்தி வைத்தார். கரூர், தாந்தோன்றி வட்டாரங்களை சார்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வைத்தனர். கற்பினி பெண்களுக்கு குங்குமம், மஞ்சள், வளையல், புடவை போன்ற

பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை அனைவருக்கு 5 வகையான உணவுகளை அமைச்சர் பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
அப்போது பேசிய அமைச்சர் விஜயலட்சுமி, கற்ப காலம் என்பது பெண்ணுக்கு ஒரு

மகிழ்ச்சியான காலம், அந்த காலத்தில் பெண்களின் முகம் மிகச் சந்தோஷமாக இருக்கும், இந்த

கால கட்டத்தில் நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும், நல்ல பாடல்களை கேட்க வேண்டும், சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
