தெலங்கானா மாநிலம் லக்ஸெட்டிபேட்டை சேர்ந்த 51 வயது நபர் ஒருவர், கடந்த 3 ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த ரூ.10 நாணயங்களை கொடுத்து புதிய இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். மொத்தமாக ரூ. 1.23 லட்சம் மதிப்புள்ள அந்த வாகனத்திற்கான தொகையை அவர் ரூ.10 நாணயங்களாகவே ஷோரூமில் செலுத்தியது ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரூ.10 நாணயங்கள் கொடுத்து பைக் வாங்கிய நபர்..
