டெல்டா மாவட்டங்களில் நீர் பற்றாக்குறையல் கருகிய பயிர்களை ஆய்வு செய்ய வராத அதிகாரிகள் மற்றும் வேளாண்மை துறை அமைச்சரை கண்டித்து
திருக்கருக்காவூர் துணை வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருக்கருகாவூர் துணை வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கருகும் பயிர்களை அதிகாரிகள் ஆய்வு

செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் டெல்டா மாவட்ட விவசாயிகளை நீர் பற்றாக்குறையை போக்கி பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..
தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர், விழிதியூர், ரெங்கநாதபுரம், அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகியுள்ளன.
கருகி உள்ள நெல் பயிர்களை விவசாயிகள் கை டிராக்டர் மூலம் உழுது அழிக்கக்கூடிய ஒரு அவலமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இப்படியான இடங்களை ஆய்வு செய்து கணக்கீடு செய்யாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக கணக்கெடுக்கும் பணியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்..
கூப்பிட்ட தூரத்தில் இருக்கக்கூடிய மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் ரவி அவர்கள் இதுவரை சம்பவம் ஏற்பட்டுள்ள, பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய அழிவை ஏற்படுத்தியிருக்கக்கூடிய பகுதிகளை ஆய்வு செய்யாமல் இருப்பது கவலையளிக்கக்கூடிய விஷயமாக இருப்பதாகவும்..
இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, விவசாயிகளுடைய நலன் சார்ந்த பல்வேறு தேர்தல் அறிக்கைகள், வாக்குறுதிகள் அளித்திருந்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து போராடி கொண்டிருக்கின்றோம்.
மேலும் மெலட்டூர் பகுதியில் பம்பு செட்டில் இருந்து வரக்கூடிய உப்புநீரால் பயிர்கள் கருகி வருகிறது. மேட்டூர் அணை நாளைக்கு மூடப்படக்கூடிய சூழ்நிலையில், மேட்டூர் அணையை நம்பி சாகுபடி செய்யப்பட்டிருக்கக்கூடிய அந்த விவசாய நிலங்களில் இருக்கக்கூடிய நடவு செய்யப்பட்ட பயிர்களும் கருகி அழிந்து கொண்டிருக்கின்றன.
தமிழக வேளாண்மை துறை அமைச்சர் உடனடியாக இந்தப் பகுதிகளுக்கு வந்து, அவர் கணக்கெடுப்பு பணியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம். எங்களுடைய பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து கணக்கெடுக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..
வேளாண் துறை அமைச்சர் தொடர்ந்து வந்து இந்த பயிர்களை பார்க்கவில்லை என்றால், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடக்கூடிய ஒரு போராட்டத்தை அனைத்து விவசாயிகளையும் திரட்டி நடத்துவோம் எனக்கும் தெரிவித்தனர்.
