தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு பிரச்னையைத் தீர்க்க முடியாமல், காற்று இல்லை, மழை இல்லை எனக் காரணம் கூறுவதாக தவெக அரசு மீது திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாடு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்கவுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், தவெக அரசின் மெத்தனத்தால் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். கொள்ளை விலையில் மின்சாரம் கொள்முதல் செய்து கடனை அதிகரிப்பதுதான் தவெகவின் மாற்று அரசியலா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கடனை அதிகரிப்பதுதான் மாற்று அரசியலா?”.. கனிமொழி கேள்வி
