Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லி போராட்டத்தை விமர்சித்த நடிகர் ரன்வீருக்கு கொலை மிரட்டல்

டில்லி போராட்டத்தை விமர்சித்த பாலிவுட் நடிகர் ரன்வீர் ஷோரேவுக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த 10ம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடந்த போராட்டத்தின் போது நடிகர் இம்ரான் கான் உள்ளிட்ட பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவதை எதிர்த்து பாலிவுட் நடிகர் ரன்வீர் ஷோரே தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ‘உங்களின் பலத்தை நாடாளுமன்றத்திலும் தேர்தல் களத்திலும் காட்டுங்கள், வீதிகளில் அல்ல. அங்கும் அநீதி இழைக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுங்கள், அதுவே உண்மையான ஜனநாயக வழிமுறை. மாறாக பொதுச் சொத்துகளையும் சட்டம்-ஒழுங்கையும் முடக்குவது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை’ என்று ஆவேசமாக குறிப்பிட்டிருந்தார்.

நடிகரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜ் பரிஹார் என்ற பெயரில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரன்வீர் ஷோரேவுக்கு மிரட்டல் இ-மெயில் அனுப்பியுள்ளார். அதில் நடிகரின் நடமாட்டத்தை 24 மணி நேரமும் ரகசியமாக கண்காணித்து வருவதாகவும், சரியான நேரம் வரும்போது அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்படும் என்றும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த ரன்வீர் ஷோரே, தனக்கு வந்த கொலை மிரட்டல் ஆதாரங்களை மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் புகாரும் அளித்தார். இதனைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!