ரணபலி’ திரைப்படத்தில் தான் ஏற்று நடித்த ‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கத்தினால், 400 குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை நடிகை ராஷ்மிகா மந்தனா வழங்கியுள்ளார். அரிசி, கேழ்வரகு உள்ளிட்ட அத்தியாவசியமான 12 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அவர் வழங்கியுள்ளார். உதவி செய்வதற்கு பெரிய தொகையோ முயற்சியோ தேவையில்லை என்றும், சிறிய உதவிகூட ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
400 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ராஷ்மிகா மந்தனா
