Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

 பள்ளி கூரை இடிந்து விழுந்து 17 குழந்தைகள், ஆசிரியை பலி; 40-க்கும் மேற்பட்டோர் காயம்

 பள்ளி கூரை இடிந்து விழுந்து 17 குழந்தைகள், ஆசிரியை பலி; 40-க்கும் மேற்பட்டோர் காயம்

பெஷாவரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் கூரை இடிந்து விழுந்த விபத்தில், 17 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகப் பெஷாவர் தலைநகர் காவல் துறைத் தலைவர் மியான் சயீத் தெரிவித்துள்ளார்.

பெஷாவரின் உள்பகுதியில் உள்ள திர் காலனி பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த அனைவரும் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர். படுகாயமடைந்தவர்களை மீட்க லேடி ரீடிங் மருத்துவமனையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் முகம்மது ஆசிம் தெரிவித்தார்.

இடிபாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களையும், பள்ளி ஊழியர்களையும் மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!