மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். மேலும், மீனவர்களுக்குச் சொந்தமான 3 மீன்பிடி விசைப்படகுகளையும் மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் வெளிநாட்டு கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து கவலை அளித்து வரும் நிலையில், மீனவர்களின் விடுதலை மற்றும் படகுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்களை மீட்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்
