இந்திய குத்துச்சண்டை சம்மேளன பொதுச்செயலாளர் பிரமோத் குமார் மீதான நிதிமுறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோக புகார்களை தொடர்ந்து, அவரை உடனடியாக இடைநீக்கம் செய்து சம்மேளன தலைவர் அஜய் சிங் உத்தரவிட்டுள்ளார். முறையான அனுமதியின்றி உலகக் கோப்பை ஒளிபரப்பு உரிம பணி ஆணையை வழங்கியது, தேசிய போட்டிகளை ரத்து செய்தது மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய குத்துச்சண்டை சம்மேளன பொதுச்செயலாளர் இடைநீக்கம்
