மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் தர்பூசணி பழத்தில் அவரது முகத்தை தத்ரூபமாக செதுக்கி அசத்தியுள்ளார். கலாமின் புகழ்பெற்ற சிகை அலங்காரம், புன்னகையான முகம் மற்றும் கண்கள் ஆகியவற்றை துல்லியமாக அந்த பழத்தின் மீது வடித்திருக்கும் இந்த மாணவனின் கலைநயம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தர்பூசணியில் கலாம் உருவம்: அரசு பள்ளி மாணவன் அசத்தல்
