Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மழைநீர் கால்வாய் பணி முடக்கம் – மாதவரம் சாலையில் கடும் நெரிசல்!

மழைநீர் கால்வாய் பணி முடக்கம் – மாதவரம் சாலையில் கடும் நெரிசல்!

 சென்னை மாதவரம்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மழைக்காலத்தில் புழல் ஏரி உபரி நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக கடந்த திமுக ஆட்சியில் 24 கோடி ரூபாய் செலவில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக மாதவரம்- செங்குன்றம் சாலையில் இடது புறம் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வலதுபுறமாக ஒரே பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கடந்த 3 மாதங்களாக மழைநீர் கால்வாய் திட்டப்பணி மந்தமாக நடைபெற்று வருவதால் இந்த வழியாக வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ்கூட போகமுடியாத நிலைமைதான் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இந்த பகுதியில் கன மழை பெய்ததால் மழைநீர் சாலையில் தேங்கியது.

இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வாகன ஓட்டிகள் தவித்தனர். வி.எஸ்.மணி நகர் முதல் வடபெரும்பாக்கம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கும் மஞ்சம்பாக்கம் போன்ற பகுதிகளில் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்தை நெரிசலை சீர்செய்ய போக்குவரத்து போலீசார் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக ஆட்டோ ஓட்டுனர்கள், சமூகநல ஆர்வலர்கள் ஆகியோர் உதவி செய்தனர். இதனால் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது. பொதுமக்கள் கூறுகையில், ‘’மழைநீர் கால்வாய் திட்டப்பணிகள் விரைவாக முடிக்காமல் மந்தமாக நடைபெறுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரம் கால்வாய் பணிக்கு பயன்படக்கூடிய பொருட்கள் கழிவுகளை ஆங்காங்கே கொட்டி வைத்திருப்பதால் நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பணி முடிந்த இடங்களில் முறையான வெட்மிக்ஸ் மற்றும் காங்கிரீட் தரம் குறைவாக போடுவதால் புதிய சாலை உடைந்து பள்ளமாகும் நிலைமை உள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுக்க உடனடியாக கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க சென்னை மாநகராட்சி மழை நீர் கால்வாய் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டப்பணிகள் தரமாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்யவேண்டும்’’ என்றனர்.

error: Content is protected !!