மும்பை கோரேகாவ் கிழக்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒன்றரை வயது பெண் குழந்தை 6-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அதே குடியிருப்பில் வசிக்கும் 10 வயது சிறுமி குழந்தையைத் தூக்கி, 6-வது மாடியின் திறந்தவெளிப் பகுதி வழியாகத் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமி மற்றும் அவரது பெற்றோர், உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6-வது மாடியிலிருந்து குழந்தை விழுந்து பலி.. தள்ளிவிட்ட 10 வயது சிறுமி
