நவராத்திரியின் எட்டாம் நாளான துர்காஷ்டமியை முன்னிட்டு அக்டோபர் 19 அன்று கேரளாவில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்குப் பொருந்தும் என ஆளுநர் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அக். 20, 21-ல் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் வருவதால், இந்தத் தொடர் விடுமுறை மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் துர்காஷ்டமிக்கு பொது விடுமுறை அறிவிப்பு
