Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் எலான் மஸ்க்? – முன்னாள் பாஜக எம்பி குற்றச்சாட்டு!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் எலான் மஸ்க்? – முன்னாள் பாஜக எம்பி குற்றச்சாட்டு!

 டில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி நடந்து வரும் “லெஹ்ரா தோ திரங்கா” போராட்டத்தின் பின்னணியில் எலான் மஸ்க் இருப்பதாக, பாஜக முன்னாள் எம்பி ஒருவர் கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தத் போராட்டத்தை காக்ரோச் ஜனதா கட்சி (CJP) ஒருங்கிணைத்து நடத்தி வரும் நிலையில், இந்த ஒட்டுமொத்த போராட்டமும் எலான் மஸ்க்கின் தூண்டுதலின் பேரில் நடத்தப்படுகிறது என்று பாஜக தலைவர்களில் ஒருவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் குற்றம் சாட்டியுள்ளார். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் சொந்த விதிகளின்படி செயல்பட விரும்புவதாகவும், அதற்காக இந்த அச்சுறுத்தலை வேண்டுமென்றே தூண்டி விடுவதாகவும் கூறினார்.

இந்தியாவில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்க நாட்டை பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துடன் ஒப்பிடுவதாகவும், இந்தத் போராட்டங்கள் தேவையற்றவை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக உச்ச நீதிமன்றத்தை அச்சுறுத்தும் நோக்கில் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!