Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரியபாளையம் அருகே லாரி டிரைவர்கள் சாலை மறியல்

பெரியபாளையம் அருகே லாரி டிரைவர்கள் சாலை மறியல்

ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணை பகுதியில் உள்ள சவுடு மண் குவாரியில் கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார். அப்போது, அதிக பாரம் மற்றும் போலியான ரசீது இருப்பதாக கூறி 2 லாரிகளை மடக்கியதால் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த லாரி டிரைவர்கள் சாலையில் லாரிகளை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால், சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணை பகுதியில் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது.

இதில், அதிக அளவு மண் எடுப்பதாகவும் அதிக பாரம் ஏற்றி செல்வதாகவும் சென்னை கனிம வளத்துறை இணை இயக்குனர் ஆறுமுகம் நாயனாருக்கு வந்த தகவல்கள் வந்தது. அதன் அடிப்படையில் அவர் நேரடியாக குவாரியில் ஆய்வு செய்தார். அப்போது, 2 லாரிகளை மடக்கி போலியான ரசீது இருப்பதாகவும் அதிக பாரம் ஏற்றி செல்வதாக 2 லாரிகளை நிறுத்தியுள்ளார். இதையறிந்த சக லாரி ஓட்டுநர்களும் லாரி உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான ரசீது இருப்பதாகவும் குவாரி ஆட்களிடம் இது குறித்து கேட்க வேண்டும் எனவும் தங்களது லாரிகளை விட வேண்டும் என கூறி பெரியபாளையம் – சென்னை சாலையில் மஞ்சங்காரணை பகுதியில் அதிகாரிகளை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார் போராட்டகாரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சாலையில் குறுக்கே லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சிவப்பிரியா வந்தபோது அவரிடம் லாரி உரிமையாளர்களும் லாரி ஓட்டுநர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் உடன்பாடு ஏற்படாத லாரி ஓட்டுநர்கள் லாரி உரிமையாளர்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பெரியபாளையம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்தனர். இதனால் சென்னை – திருப்பதி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!