வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் எசண்டனா நகரில் இருந்து 27 பயணிகளுடன் பசுபிக் கடலில் சென்ற படகு ஒன்று நடுக்கடலில் திடீரென கவிழ்ந்து அண்மையில் விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மெக்சிகோ கடற்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு, கடலில் தத்தளித்த 16 பேரை உயிருடன் மீட்டனர். எனினும், கடலில் மூழ்கி மாயமான எஞ்சிய 11 பேரை கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
மெக்சிகோவில் படகு கடலில் கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி?
