ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தவெக தொழில்த் துறை அமைச்சர் கீர்த்தனா தனது குடும்பத்தினருடன் இன்று (அக்.20) வழிபாடு மேற்கொண்டார். இதற்காக திருமலைக்கு வருகை தந்த அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் உரிய வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அவர் மூலவரை தரிசித்து சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
திருப்பதி கோயிலில் குடும்பத்தினருடன் அமைச்சர் கீர்த்தனா வழிபாடு
