நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் சென்னையிலிருந்து தென்காசி செல்லும் ரயிலில் இருந்து இறக்கப்பட்டு பாதிவழியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நாதக கொள்கைப் பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், ஜனநாயக சக்திகளை பயங்கரவாதிகளை போல கைது செய்யும் தவெகவின் பாசிசபோக்கு வன்மையாக கண்டிக்கதக்கது. கோழைத்தனமான இந்த அரசபயங்கரவாதத்திற்கு நிச்சயம் சட்டத்தின்படி பதிலடி கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் கைது
