Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் வாக்காளர் சேர்க்கை முகாம் – நவ.12 முதல் டிச.11 வரை!

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2027-ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2027ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் அக்.19 (இன்று) வாக்காளர் பதிவு அலுவலகங்களில் வெளியிடப்படும். பின்னர் இப்பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
வரைவு வாக்கு சாவடிகள் பட்டியல் மீது கோரிக்கைகள் இருந்தால் எழுத்து பூர்வமாக பெறப்பட்டு தகுதியின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்து இறுதி வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்யப்படும்.
மேலும், 2027-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடர்பாக ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவ.12 அன்று வெளியிடப்பட உள்ளது.
பின்னர் இப்பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட வாக்குசாவடிகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இதன் மூலம் பொது மக்கள் தங்கள் பெயர் மற்றும் பிற விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்
நவ.12-ம் தேதி முதுல் டிச.11-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் அதாவது 01.01.2027 அன்று 18 வயதினை பூர்த்தி செய்பவர்கள் மற்றும் அடுத்த மூன்று காலண்டுகள் அதாவது 01.04.2027, 01.07.2027 மற்றும் 01.10.2027 அன்றைய நாளில் 18 வயதினை பூர்த்தி செய்பவர்கள் தங்களின் பெயர்களை சேர்தல், திருத்துதல், முகவரி மாற்றம்,இறந்த வாக்காளர்களின் பெயரை நீக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேற்படி காலக்கட்டத்தில் சம்மந்தப்பட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களுக்கு உரிய படிவங்களில் விண்ணப்பிக்கலாம். பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்ள www.nvsp.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்’ என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!