உத்தராகண்ட் மாநிலத்தில் பைக்கில் சென்ற தம்பதியினர் போலீஸ் சோதனையை கண்டு அச்சமடைந்தனர். அப்போது கணவர் தனது மனைவியின் நிலையை அறியாமல், போலீசாரிடம் சிக்கக்கூடாது என்ற சுயநலத்துடன் பைக்கை நிறுத்தாமல் சென்றார். இதில் கீழே விழுந்த பெண் காயமடைந்து வலியால் துடித்தார். இதனை கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மனிதாபிமானத்துடன் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மனைவியை தவிக்கவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் சோதனையில் மனைவியை தவிக்கவிட்டு தப்பி ஓடிய கணவர்
