Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விடுமுறை எதிரொலி – ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விடுமுறை எதிரொலி–ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறையுடன், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, சென்னையில் வசிக்கும் மக்கள் ஆயுத பூஜை மற்றும் பண்டிகையை கொண்டாடத் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

நான்கு நாள் விடுமுறை முடிந்து மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். நேற்று மாலை முதலே தென் மாவட்டங்களான திருச்சி, நெல்லை, மதுரை, நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள், அரசுப் பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி வருவதால், ஜிஎஸ்டி சாலையில் கடும் நெரிசல் நிலவுகிறது.

நேற்று முதலே செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து மக்கள் ஒரே நேரத்தில் திரும்புவதால், வாகனங்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் அணிவகுத்து நின்று, 30 நிமிடங்களுக்கும் மேலாக ஊர்ந்து செல்கின்றன.

error: Content is protected !!